கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்பு.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் ஏற்கப்பட்டது.


கோவை: நாடு முழுவதும் பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அதேபோல, இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்,

மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், சரவணன், அண்ணாதுரை, சுந்தரராஜன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், நகரமைப்பு அலுவலர் கருமத்தாள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...