கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணிற்கு மேற்கு மண்டல இணை இயக்குநர், சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுறை, நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிச் செலுத்தினர்.
கோவை: பணியின் போது இறந்த, தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1944 ஏப்.14ல், மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய, தீயணைப்பு வீரர்கள் சுமார் 66 பேர் உட்பட, 220 பேர் பலியாகினர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், ஏப்.14ல், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 'தீ தொண்டு தினம்' என "நீத்தார் நினைவு தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு ஒரு பகுதியாக, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணிற்கு மேற்கு மண்டல இணை இயக்குநர் (கூடுதல் முழு பொருப்பு) சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுறை, நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிச் செலுத்தினர்.

இதே போல், அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களுக்கு, தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.