கோவை கிணத்துக்கடவில் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு..!

தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டி கிழக்கு தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி அகிலப்பகவுண்டர் வயது ( 72), இவரது மனைவி உன்னாத்தாள் (58) கடந்த 6-ம் தேதி தனது மகன் போதன்ராஜ்வுடன் பைக்கில் சொந்த வேலை காரணமாக கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பினார்கள்.

அப்போது கிணத்துக்கடவு பொள்ளாச்சி-கோவை நெடுஞ்சாலையில் கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் வந்தபோது குறுக்கே நடந்து வந்த நடராஜன் என்பவர் மீது மோதாமல் இருக்க போதன்ராஜ் பிரேக் போட்டதால் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதில் போதன்ராஜுக்கும் காயம் ஏற்பட்டது.

ஆனால் உன்னாத்தாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உன்னாத்தாள் நேற்றிரவு இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...