குற்றவாளிகளில் ஒருவரான ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (19). பைனான்ஸ் கம்பனி நடத்தி வந்த இவர், கடந்த ஜனவரி 2021 ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழ்ச்செல்வன், ராஜராஜன் ஆகிய இருவர் சரணடைந்தனர்.
இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக, பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களான இந்து முன்னனியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பரான ரங்கநாதன் இருவரும், சரவணனை வெட்டி கொலைச் செய்ய தூண்டியது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன், ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் என நான்கு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ரங்கநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் ரங்கநாதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் ரங்கநாதனிடம் வழங்கப்பட்டது.