கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கரவளி மாதப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அலுமினியத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கரவளி மாதப்பூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அலுமினியத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சம்பத்குமார் என்ற விவசாயி கூறுகையில், தங்கள் பகுதிக்கு அலுமினிய ஆலை வரும் பட்சத்தில் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசடையும் எனவும், இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.
அலுமினிய ஆலைக்கு எதிராக ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர்களை வலியுறுத்திய நிலையில், அது தொடர்பான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கவுன்சிலர்கள் தங்களை சந்திக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறிய மக்கள், இந்தப் பிரச்சினையில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.