கோவையில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி….!

கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு தினங்களாக, தொடர்ந்து மதிய வேலைக்கு பிறகு கோடை மழை பெய்து வருகிறது.

ஒரு சில இடங்களில் கனமழை பெய்தாலும் மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்தநிலையில், இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட போதும், வெப்பத்தின் அளவு அதிகரித்தே காணப்பட்டது. இருந்தபோதும், இன்று மதியம் 3 மணிக்குப் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.



குறிப்பாக, கோவை விமான நிலையம், காளப்பட்டி, பீளமேடு, ஹோப்ஸ், கோல்டுவின்ஸ், சிங்காநல்லூர், வரதராஜ புரம், ராமநாதபுரம், நேரு நகர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திடீர் மழையால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பிற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருந்தபோதும், கோவையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...