கோவை விழா: கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி..!

கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டி சார்பில் கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார் ஷோ பேரணியை இன்று காஸ்மோபாலிட்டன் கிளப், ரேஸ் கோர்ஸ் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் துணை கமிஷனர் (போக்குவரத்து) செந்தில் குமார் கொடியசைத்து கார் பேரணியை தொடங்கி வைத்தனர். சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.



ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 50 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள் வழியாகச் சென்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரை சென்றது.



இந்த நிகழ்ச்சியில் மிகவும் பார்ப்பதற்கு அரிய கார்கள் காட்சிப்பட்டு இருந்ததை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.



இந்நிகழ்ச்சியை ரோட்டரி கோயம்புத்தூர் நகர தலைவர் செந்தில் குமார், திட்டத் தலைவர் டி.கனகராஜ், செயலாளர் ஆர்.டி.என்.கணேசன் ஆகியோர் கோயம்புத்தூர் விழா உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...