'நானும் திராவிடன் தான்'- கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு..!

நிறத்தின் அடிப்படையில் நானும் திராவிடன் தான். திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டம், கண்ணாட்டுவிளையில் கட்டாய மதமாற்றம் பேசுபொருளாகி இருக்கின்றது என தெரிவித்த அவர் தமிழகத்தைப் பொறுத்தவரைக் கட்டாய மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறினார். அதற்கு இன்று கூட கண்ணாட்டுவிளையில் மாணவி கொடுத்துள்ள புகார் மற்றொரு சான்று. எனவும் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியே மதமாற்றம் பெரிய அபாயம் என்று சொல்லி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். கண்ணாட்டுவிளை விவகாரத்தை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மதத்தை எதற்குப் பள்ளி அறைக்குக் கொண்டு வருகின்றார்கள் என்பதை அரசு விசாரிக்க வேண்டும் எனவும் கூறினார். கன்னியாகுமரி விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதில் பா.ஜ.க தலையிடும் எனவும் தெரிவித்தார்.

40 ஆண்டுகளில் மதத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறிய அவர் தமிழக அரசு பதிலைப் பொறுத்தே பா.ஜ.க நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தி மொழி விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துடன் முரண்பாடு எதுவும் இல்லை என கூறிய அவர் இந்தி எங்கேயும் திணிக்கப் பட வில்லை எனவும் தெரிவித்தார். இந்தி பேசுபவர்களின் சதவீதம் அதிகம் என்ற அடிப்படையில் அமித்ஷா சொல்லி இருக்கின்றார் எனவும் விளக்கமளித்தார்.

20 ஆண்டுக்காலம் இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவில் இணைப்பு மொழியாகத் தமிழைக் கொண்டு வந்துவிடலாம் எனவும் தெரிவித்தார். அவ்வகையில் ஏ.ஆர்.ரகுமான் ஆசைதான் எங்களின் ஆசையும் என தெரிவித்தார். இங்கு தமிழை மட்டும் வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். 

அனைத்து மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதி, தமிழை பயிற்று மொழியாக்க தமிழக அரசு நிதி உதவி செய்ய முன் வந்தால் பா.ஜ.க உடன் இருக்கும் எனவும் தெரிவித்தார். தமிழ் மெல்லமெல்ல செத்து கொண்டு இருக்கின்றது என கூறிய அவர் 5 முறை திமுக ஆட்சியில் என்ன செய்து இருக்கின்றது என கேள்வி எழுப்பினார். சர்வதேச அளவில் தமிழை வளர்க்க கமிட்டி அமைத்துச் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமத்ஷா உள்துறை அமைச்சராகப் பேசி இருக்கின்றார் என கூறிய அவர் தமிழை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால் எங்கள் கருத்தை சொல்லுவோம் எனவும் தெரிவித்தார். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழிதான் நம்பர்ஓன் என்று கூறிய அவர், குவான்டிட்டி அடிப்படையில் இந்தி இருப்பதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.கவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி இருக்கின்றது? எனவும் கேள்வி எழுப்பிய அவர் தேவையில்லாத வேலையைச் செய்வது தமிழக முதல்வர்தான் எனவும் கூறினார்.

வரலாறு எதுவுமே தெரியாமல் ஸ்டாலின் பேசுகின்றார் எனவும் தெரிவித்தார். 10 மாதமாகக் கேலி செய்யும் அளவிற்குத் தமிழக ஆட்சி இருந்து வருகின்றது எனவும் விமர்சித்தார். பா.ஜ.கவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை எனவும் கூறினார்.

நீட் விவகாரத்திற்குப் பல மாநிலங்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த மாநிலம் பதில் அளித்தது? என கேள்வியும் எழுப்பினார். மத்தியில் 450 சீட்டுகளை பிடித்து பா.ஜ.க மீண்டும் இந்தியாவில் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் பேசுனது தான் பிரபலமாகின்றது (பீஸ்ட் படத்தில் வரும் வசனம்). இந்தி தேவை என்றால் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கின்றோம் எனவும் தெரிவித்தார். பீஸ்ட் ரிவியூ பார்த்தேன். நல்லா இருப்பதாக சொல்கின்றனர்.

இந்தி பிரச்சார சபையில் பிராத்மிக் தேர்வில் தமிழக மாணவர்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர் என கூறினார். ஏ.ஆர்.ரகுமான் அவருடைய படமான தமிழன்னை படத்தை வெளியிட்டு இருக்கின்றார். கருத்து சுதந்திரம் அடிப்படையில் அவர் பதிவிட்டு இருக்கின்றார்.எங்கள் எதிரி திமுக மட்டும் தான்.

ஏப்ரல் 14 யை சமத்துவ நாளாக 5 முறை ஆட்சிக்கு வந்த பின் இப்போதுதான் திமுக சொல்லி இருக்கின்றது. ஆனால் பா.ஜ.க சமத்துவ நாளாக அம்பேத்கர் பிறந்தநாளை நீண்ட நாட்களாக அனுசரித்து வருகின்றது எனவும் தெரிவித்தார். 

பா.ஜ.கவின் அனைத்து பூத்களிலும் அம்பேத்கர் படத்திற்கு நாளை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த இருக்கின்றோம் எனவும் கூறினார். சமூகநீதியாக ஊறிய கட்சி பா.ஜ.க என தெரிவித்தார். திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை என கூறிய அவர் நிறத்தின் அடிப்படையில் நானும் திராவிடன்தான்.

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான். பா.ஜ.கவினர் மண்ணை சார்ந்த தொழில் செய்கின்றோம். அதிமுக, திமுகவில் எவ்வளவு பேர் மண் சார்ந்த தொழில் செய்கின்றனர்?. துபாயில், வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர் என தெரிவித்தார். பா.ஜ.க கொள்கை அடிப்படையில்தான் வேறு. வரும் 2026-ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும் என கூறினார்.

தமிழகத்தைச் சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம் ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...