நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ரயில் நிலையத்தில் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.11.85 லட்சம் பணம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை - திருப்பதி இடையே செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று காலை வழக்கம் போல் கோவை ரயில் நிலையம் வந்தது. அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சந்தேகத்துக்கிட்டமான முறையில் கைப்பையுடன் வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் கொண்டு வந்த பையைச் சோதனை செய்தனர். அப்போது அதில் பேப்பரால் சுற்றப்பட்டு ரூ.11.85 லட்சம் பணம் மற்றும் ரூ.30-லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது.
இதனையடுத்து அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை திருநகர் அருகே உள்ள குறிஞ்சி கார்டனை சேர்ந்த உதயானந்தம்(50) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் ராஜவீதியில் தங்க நகைக்கடை வைத்து நடத்தி வருவதும், இங்கிருந்து தங்க நகைகளைத் தயாரித்து திருப்பதிக்குக் கொண்டு சென்று அங்கு விற்பனை செய்து விட்டு பணத்துடன் மீண்டும் கோவை வந்தது தெரியவந்தது.
ஆனால் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.