கோவை மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 10.7 கோடி ஒதுக்கீடு..!

தற்போது போர்வெல் அமைப்பதற்கும் பழைய போர்வெல் பழுதுபார்ப்பதற்கும் 10.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க 10.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோடைக் காலத்தில் தொடர்ந்து கோவை மாநகராட்சியில் கோடையைச் சமாளிக்க 10.5 கோடி ரூபாய்க்கு போர்வெல் அமைத்தல் மற்றும் பழைய போர்வெல் பழுதுபார்க்கக் கோவை மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோடை வெயில் அதிகரிப்பு காரணமாகக் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சில வார்டுகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும் சில வார்டுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் சீரற்ற தண்ணீர் வினியோகம் என்பது நடைபெற்று வருவதாக மாமன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தற்போது போர்வெல் அமைப்பதற்கும் பழைய போர்வெல், போர்வெல் பழுதுபார்ப்பதற்கும் 10.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி போர்வெல் அமைப்பதற்கும் பழைய போர்வெல் போர்வெல் பழுதுபார்ப்பதற்கும் 10.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 107 புதிய போர்வெல் அமைக்க 5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 169 போர்வெல் சுத்தம் செய்வதற்கு 1.69 கோடியும், 152 போர்வெல் பழுது பார்ப்பதற்கு 3.18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...