கோவையில் ஏப்.14-ம் தேதி இறைச்சி விற்க தடை: மாநகராட்சி அறிவிப்பு..!

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தெரிவித்துள்ளார்‌.



கோவை: 2022-ம்‌ ஆண்டு 14.04.2022 அன்று “மகாவீர் ஜெயந்தி” தினத்தை முன்னிட்டு அன்றைய தினம்‌ தமிழக அரசால்‌ ஆடு, மாடு மற்றும்‌ கோழிகளை வதை செய்வதும்‌, இறைச்சிகளை விற்பனை செய்வதும்‌ தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ உக்கடம்‌ ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர்‌ ஆடு அறுவைமனை, போத்தனூர்‌ மற்றும்‌ கணபதி மாடு அறுவைமனைகள்‌ செயல்படாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...