கோவை உயிர் அமைப்பு சார்பில் சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி..!

விதிமுறைகளை மீறுவதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால், விபத்து இல்லாத நகரை உருவாக்க முடியும் என ஜெர்மனி நாட்டு தூதுவர் வால்டர் லிண்டர் தெரிவித்தார்.


கோவை: கோவை உயிர் அமைப்பு சார்பில், சாலை விபத்துகளை தவிர்க்க, விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி, ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில், பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக, ஜெர்மனி நாட்டு தூதுவர் வால்டர் லிண்டர் பங்கேற்று பேசுகையில், பள்ளி மாணவர்கள் சாலை விதிமுறைகள் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற கண்காட்சிகளில், பெரியோரும் பங்கேற்க வேண்டும். தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளால், விபத்து இல்லாத நகரை உருவாக்க முடியும், என்றார். நிகழ்ச்சியில், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகர், அறங்காவலர் ராமசாமி, ஜெர்மனி நாட்டு தூதரக அலுவலர் தாமஸ் ஸ்ட்ரைடர் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...