வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகைக்கடை உரிமையாளரை கைது செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100-கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதியில் சுரேஷ் என்பவர் நடத்திவரும் மளிகைகடை மற்றும் வீடுகளில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் மளிகைக் கடை உரிமையாளர் சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.