கோவையில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது…!

கோவையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை, காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 23 வயதான ஆட்டோ ஓட்டுனரை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனரை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, கோவையை சேர்ந்த பொன்னுசாமி (23) என்ற ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொன்னுச்சாமி, சிறுமியை தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...