கோவை மாநகராட்சியின் புது முயற்சி..! சாலை பிரச்சனையா...? வாட்ஸ் அப்பில், புகைப்படத்துடன் ஒரு மெசேஜ் போதும்…!

கோவை மாநகராட்சியின் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய சோதனை அடிப்படையில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம். 8147684653 என்ற வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணிற்கு புகைப்படத்துடன், ஜி.பி.எஸ்‌. இருப்பிடத்தை பொதுமக்கள்‌ அனுப்பி வைக்கலாம்‌.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்மையில் தமிழக முதல்வர் கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார்.

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்; நிதி ஒதுக்கீடு

அதன்படி, கோவை மாநகராட்சியின் பிரதான சாலைகளில் பழுதடைந்த சாலைகள் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோதனை அடிப்படையில் குண்டும், குழியுமாக உள்ள தார் சாலைகளை சீர் செய்ய தனியார் நிறுவனத்துடன் (சவுரவ் கிரவுண்டு ரியாலிட்டி என்டர்ப்ரைசஸ்) கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. சோதனை முறையில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப் எண் மூலம் புகார் அளிக்கலாம்



இந்த நிறுவனம் “81476-84653” என்ற வாட்ஸ்அப் எண் ஒன்றை பொது மக்களிடம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உள்ள பொதுமக்கள், எங்காவது குண்டும், குழியுமான சாலைகள் இருந்தால் அதை செல்போனில் படம் பிடித்து, பழுதான சாலை உள்ள இடம் குறித்த ஜி.பி.எஸ் லோகேஷனை அந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால், அதை உடனடியாக அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள்.

சீரமைப்பு பணிகள்



பின்னர், பிரத்தியேக இயந்திரம் மூலம் “கோல்டு மிக்ஸ்” என்ற கலவையை கொண்டு பழுதடைந்த சாலையை சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தற்போது, சோதனை முறையில் சில வார்டுகளில் புகார் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த முயற்சி வெற்றி பெற்றால், தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளது.



இந்நிறுவனத்தின், முதல் பணியாக, கோவை குட்செட் ரோடு பகுதியில் குண்டும், குழியுமாக இருந்த சாலையை “கோல்டு மிக்ஸ்” கொண்டு சீர் செய்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தார் வைத்துள்ள மென்பொருள் மூலம், வாட்ஸ் அப்புக்கு வரும் தகவல்கள் தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

புகார் அளித்தவர்களுக்கு குறுஞ்செய்தி

அதன்பிறகு, சாலைகள் பழுதாக உள்ள இடம் குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தும், நேரடியாகவே புகார் அளித்தவருக்கு தகவல்கள் பகிரப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட கூடிய நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும், என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...