வால்பாறை நகராட்சி கூட்ட தொடரிலிருந்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு..!

தமிழக அரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்துவதை கண்டித்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். 21-வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒருவர் மட்டும் அதிமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அவசர கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்துவது குறித்து நகரமன்ற தீர்மானம் மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு தெரிவிக்கும் வகையில் வால்பாறையில் நகராட்சியில் இன்று அவசர நகரமன்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி துணை தலைவர் செந்தில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசு சொத்துவரி உயர்த்துவதைக் குறித்து அவசர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

தமிழக அரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்துவதை கண்டித்து அதிமுக உறுப்பினர் மணிகண்டன் வெளிநடப்பு செய்தார்.

வால்பாறை பகுதியில் சுமார் 75 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வால்பாறையில் உள்ள மக்கள் அனைவரும் தனியார் தேயிலை தோட்ட பெரும் நிறுவனங்களில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

வால்பாறை டவுன் பகுதி சோலையாறு அணை பகுதி, ரொட்டிகடை ஆகிய பகுதிகளில் மட்டுமே சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் மக்கள் தேயிலை தோட்டம் நிறுவன குடியிருப்பில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

மேலும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளது. வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நம்பி வாழும் வியாபாரி மக்கள் திடீரென்று சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். மேலும், அதிமுக ஆட்சியில் இவ்வளவு சொத்து வரி கூட்டியது இல்லை என்றும் 17-வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.



21-வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒருவர் மட்டுமே அதிமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த தீர்மானம் சொத்து வரி உயர்வு குறித்து நகர மன்ற கூட்ட தொடரில் தீர்மானம் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கு பின்பு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...