பில்லூர்‌ கூட்டுக்குடிநீர்‌ திட்டம்‌-III: கோவை மாநகராட்சி ஆணையாளர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்றுவரும்‌ கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பவானி ஆற்றின்‌ நீர் ஆதாரமாகக் கொண்ட குடிநீர்‌ பில்லூர்‌-III திட்ட கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சோக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பவானி ஆற்றின்‌ நீர் ஆதாரமாகக் கொண்ட குடிநீர்‌ பில்லூர்‌-III திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முரகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்றுவரும்‌ கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ இன்று (12.04.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, செய்தியாளரிடம்‌ தெரிவித்ததாவது,

“கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும்‌ பில்லூர்‌ அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லார்‌-III திட்டம்‌ 2035-ம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சியிலுள்ள மக்கள் தொகையைக் கருத்தில்‌ கொண்டு திட்டம்‌ தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முரகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ கட்டுமான பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் குழாய்‌ பதித்தல்‌ போன்ற பணிகள்‌ நடைபெற்றுவருகிறது.

இப்பணிகளில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைவாக செய்து முடிக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்‌ நெல்லித்துறை ஊராட்சி, முரகையன்‌ பரிசல்துறை பகுதியில்‌ ரூ.134 கோடி மதிப்பீட்டில்‌ தலைமை நீரேற்று நிலையம்‌ கட்டுமானப்‌ பணி தற்போது 30 சதவீதப்பணிகள்‌ நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளைத் தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க தமிழ்நாடு Gib வடிகால்‌ வாரிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத்‌ தொடர்ந்து, முரகையன்‌ பரிசல்துறை பகுதியிலிருந்து சுமார்‌ 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருதூர்‌ பகுதிக்கு குடிநீர் பம்பிங்‌ செய்து கொண்டுவரப்படுகிறது. மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியில்‌ பில்லூர்‌ அபிவிருத்தி திட்டம்‌ -III, ரூ.104.90 கோடி மதிப்பீட்டில்‌ 178 MLD குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும்‌ கட்டுமானப்பணிகளில்‌ தற்போது 50 சதவீத பணிகள்‌ நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள்‌ ஆகஸ்ட்‌ மாத இறுதிக்குள்‌ முடிக்க அறிவுறுத்தப்பட்டு, கட்டுமானப்பணிகளின்‌ தரமும்‌ ஆய்வு செய்யப்பட்டுள்ளது.



அதனைத்தொடர்ந்து, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியிலிருந்து சுமார்‌ 16 கிலோ மீட்டர்‌ தொலைவிலுள்ள கட்டன்‌ மலைக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.



அதன்பின்னர்‌, கட்டன்மலை பகுதியில்‌ ரூ.62.00 கோடி மதிப்பில்‌ 900 மீட்டா்‌ தொலைவிற்குச் சுரங்கம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. இதில்‌ 830 மீட்டர்‌ தொலைவிற்குச் சுரங்கம்‌ அமைக்கும்‌ பணி நிறைவுபெற்றுள்ளது.

இன்னும்‌ 20 நாட்களில்‌ சுரங்கம்‌ அமைக்கும்‌ பணி நிறைவுபெறும்‌. மீதமுள்ள பணிகள்‌ அம்ரூத்‌ திட்டத்தின்கீழ்‌ நிறைவேற்ற நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்விடத்திலிருந்து பன்னிமலை பகுதியில்‌ 146 இலட்சம்‌ கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம்‌ பகுதிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்குமார்‌, உதவி பொறியாளர்‌ சாம்ராஜ்‌, சிவஜோதி, பொறி.நித்திலா, மாநகராட்சி உதவி பொறியாளர்‌ பாலச்சந்தா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...