புகார் அளிக்க விடாமல் திமுக வடக்கு மண்டல தலைவர் தடுத்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் கோவை ஆட்சியரிடம் மனு..!

தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட பெண் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அப்பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.



இந்நிலையில் தனது நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கில் மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா செயல்பட்டு வந்ததாகவும், தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து கொலை செய்ய திட்டம் திட்டியதாகவும், இது குறித்து சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரளிக்க விடாமல் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் தடுத்து தங்களை மிரட்டுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து மஞ்சுளா கூறுகையில், கவிதா கவுன்சிலர் ஆவதற்கு முன்பு, தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து தன்னை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்ததாகவும், கவுன்சிலர் ஆன பின்பும் தன்னை கொலை செய்து நிறுவனத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாகவும், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் புகார் அளிக்க விடாமல் இடையூறு செய்து காவல் நிலையம் முன்பே தங்களை இழிவான சொற்களால் தங்களை மிரட்டுவதாகத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...