கோவை மாநகராட்சி 'விக்டோரியா ஹாலில் கூட்டம் நடப்பதே சிறப்பு': தனியாக ஒரு கட்டிடம் என்பது தேவையற்றது - கவுன்சிலர்கள்

தனியாக ஒரு கட்டிடம் என்பது தேவையற்றது என்றும், மரத்தடியில் அமர்ந்து கூட கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் தயார். புதிய மாமன்றம் அமைக்கும் நிதியில் மக்களுக்கு தேவையானவற்றை செய்து தரலாம் எனவும் தெரிவித்தனர்.


கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் சாதாரண கூட்டத்தில் பேசிய ஒரு வார்டு கவுன்சிலர் தனியாக மாமன்றம் கூட்டம் நடத்த ஒரு புதிய கட்டிடம் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்த கவுன்சிலர்கள், தனியாக ஒரு கட்டிடம் என்பது தேவையற்றது என்றும் கர்மவீரர் காமராஜர் போன்ற வரலாற்றுத் தலைவர்கள் வந்து சென்ற கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் கூட்டம் நடத்துவதே சிறப்பு என்று மாற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் அவர்களது பணிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். நேற்று மாமன்ற சாதரண முதல் கூட்டம் நடைபெற்றது.

இதில் 82-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபசீரா வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக உள்ள இவர் மாமன்ற உறுப்பினர்களுக்குப் புதிதாக மாமன்றம் அமைத்துத் தர வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் பலரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா ஹாலில் தற்போது அமையப்பெற்றுள்ள மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கூட்டமும் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதில் பேசிய மார்க்சிஸ்ட் மாமன்ற உறுப்பினர் ராம்மூர்த்தி கூறியதாவது:-

இந்த கட்டடமானது 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நாட்டின் பிரதமர் இங்கு வந்துள்ளார். முதல்வராக இருந்த காலத்தில் காமராஜர் வந்துள்ளார். ஆகவே, இங்கு மாமன்ற கூட்டம் நடப்பதே சிறப்பு எனவும், புதிய கட்டிடம் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கட்டிடத்தினை குறித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிந்திக்கலாம் என தெரிவித்தார்.

காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் காயத்ரி கூறுகையில்:-

மரத்தடியில் அமர்ந்து கூட கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் தயார். புதிய மாமன்றம் அமைக்கும் நிதியில் மக்களுக்குத் தேவையானவற்றை செய்து தரலாம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...