'கேம் விளையாட செல்போன் தரல..' - கோவை கிணத்துக்கடவில் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

கோவையில் கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கிணத்துக்கடவில் கேம் விளையாட தந்தை செல்போன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, இவருக்கு கிட்டாண்அம்மாள் என்ற மனைவியும், முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மா என்ற மூன்று மகள்களும், ஈஸ்வரன், அர்ஜுனன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வழக்கம் போல் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த அர்ஜுனன் தந்தையிடம் கேம் விளையாட செல்போன் கேட்டுள்ளார்.

தந்தை பழனிசாமி செல்போன் தர மறுத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அர்ஜுனன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அர்ஜுனன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...