மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்களும் 6 பேருக்கு செல்போன்களும் வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்களும் 6 பேருக்கு செல்போன்களும் வழங்கப்பட்டன.



இதனை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இருசக்கர வாகனங்களின் வசதிகள் குறித்தும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் வாகனங்களை பெற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இதனை இயக்க சுலபமாக உள்ளதாஎன கேட்டறிந்தார்.

சிலர் தங்களுக்கு லைசன்ஸ் பெற்று தரஉதவுமாறு கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அதனை நிறைவேற்றும் படி உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் தேவைகளைக் கேட்டு அறிந்தார்.



இந்நிகழ்வில் சுமார் 50 வயதான மாற்றுத் திறனாளி ஒருவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. அவர் இருசக்கர வாகனத்தில் ஏறுவதற்குச் சிரமப்பட்ட போது மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் செந்தில், மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் தனபால், ஆகியோர் உதவி புரிந்தனர். அவர்களுக்கு அந்த மாற்றுத்திறனாளி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...