கோவையை குளிர்வித்த கோடை மழை..! மக்கள் மகிழ்ச்சி.

இன்று காலை முதலே மேகமூட்டமாகவும் குளிர்ந்த காற்றும் வீசி வந்த நிலையில், திடீரென கணபதி, காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், உக்கடம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, வடவள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கோடை மழை பெய்து வருகிறது.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துகாணப்பட்ட நிலையில், அன்றாடம் பயணிப்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தன.



இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு வந்தது. இது குறித்து நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என கூறியிருந்தனர்.

அதன்படி, இன்று காலை முதலே மேகமூட்டமாகவும் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் திடீரென கோவை கணபதி, காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், உக்கடம், குனியமுத்தூர், சிங்காநல்லூர், விஐபி குவாட்டர்ஸ், அவினாசி ரோடு, வடவள்ளி, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி, ரத்தினபுரி சரவணம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கோடை மழை பெய்து வருகிறது.



இன்று காலையே மழையை எதிர் பார்க்காத மக்கள், நனைந்தபடிசென்றன. தொடர்ந்து கோடை வெப்பம் கோவையை வாட்டி வந்த நிலையில் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, கோடை பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...