'காது சவ்வு' கிழிவது போல ஹாரன் அடிக்கிறீர்களே... தட்டி கேட்ட பொதுமக்களுக்கு சரமாரி அடி உதை.. தறிகெட்டு ஓடும் தனியார் பேருந்துகள்..!

காது சவ்வு கிழிவது போல ஹாரன் அடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு உடனடியாக தனியார் பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.


கோவை: கோவையில் அதிக ஒலி மற்றும் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகள்;தட்டிக் கேட்ட பொது மக்களை நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

கோவையின் முக்கிய பகுதியான காந்திபுரம் பகுதியில் 4 பேருந்து நிலையங்கள் உள்ளன. டவுன் பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் வரிசையாக அணிவகுத்து, பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு பயணிகள் பேருந்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்தன, தொடர்ந்து பயணிகளை ஏற்றுவதில் போட்டி ஏற்பட்ட தனியார் பேருந்துகள் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் (ஏர் ஹாரன்கள்) பயன்படுத்தி ஒலியை எழுப்பினர்.

பொறுத்து பொறுத்து பார்த்த பொதுமக்களில் 2 பேர் அதை தட்டிக் கேட்டுள்ளனர். காது சவ்வு கிழிவது போல ஹாரன் அடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு உடனடியாக தனியார் பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வி எழுப்பிய பொதுமக்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

பின்னர் அங்கிருந்து புலம்பியபடி சென்ற பொதுமக்கள், தனியார் பேருந்துகளின் அராஜகம் குறித்து காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை, அதிக ஒலி எழுப்பக் கூடாது என அரசு தடை விதித்தும்,கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து ஏர் ஆரன்பயன்படுத்தி தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

இது போல் ஹாரன் எழுப்புவதால்,பயணிகளும் இதில் அச்சப்பட்டுஅங்கும் இங்கும் அவசரமாக ஓட வேண்டியுள்ளது. எனவே,காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...