கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - சிகிச்சைக்காக வந்த குழந்தை மற்றும் ஒட்டுநர் பலி.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ், கோவை மலுமிச்சம்பட்டி அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.



கோவை: உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (26) இவரது மனைவி ரம்யா இவருக்கு இன்று காலை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் குழந்தைக்குத் தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து தனியார் ஆம்புலன்சில் குழந்தை, குழந்தையின் தந்தை சிவசங்கர், உறவினர்களான பழனிச்சாமி, சகுந்தலா, வள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி வழியாக கோவை வந்தனர்.

அப்போது ஆம்புலன்சை ரவீந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். 



ஆம்புலன்ஸ் மலுமிச்சம்பட்டி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்தது.



இந்த கோர விபத்தில் ஆண் குழந்தை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த பழனிச்சாமி, வள்ளி ஆகிய இருவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தலையில் காயமடைந்த சகுந்தலா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும் பொக்லைன் மூலம் சாலையில் கிடந்த ஆம்புலன்சை அப்புறப்படுத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...