மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. கோவை பீளமேடு பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்..!

இந்த முகாமில் சரி பார்க்கப்பட்ட பட்டாக்களில் மாறுதல் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் இன்று மாலைக்குள் வழங்கப்படும். இன்றளவில் 300-க்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 52-வது வார்டு பீளமேடு பகுதியில் பட்டா மாறுதல் முகாம் கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சியில் பட்டா மாறுதல் முகாம் இன்று பீளமேடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை துவங்கிய இந்த முகாமானது மாலை வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அரசு அதிகாரிகளான தெற்கு தாசில்தார் சரண்யா, நத்தம் நிலவரி திட்ட தாசில்தார் கல்பனா அலமேலு, துணை தாசில்தார் இளவரசி, வருவாய் ஆய்வாளர் ராணி மற்றும் வி.ஓ. (கிராமத்து அதிகாரி) மூவர் முன்னிலையில் பட்டாக்கள் சரி பார்க்கப்படுகின்றது.



இந்த முகாமில் சரி பார்க்கப்பட்ட பட்டாக்களில்மாறுதல் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் இன்று மாலைக்குள் வழங்கப்படும். இன்றளவில் 300க்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முகாமிலிருந்த பட்டாவில் பெயர் மாறுதல் பெற்ற நபர் கூறியதாவது:-

பீளமேடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல நாட்கள் தங்கள் பட்டாவில் பெயர் மாறுதல் தொடர்பாக அலுவலர்களை தொடர்பு கொள்கையில் அவர்கள் காலதாமதம் செய்வதாகவும். தற்போது இந்த முகாமின் மூலம் பெரிதும் அனைவரும் பயனடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.



இதுகுறித்து முகாமினை மேற்பார்வை செய்யும் தெற்கு தாசில்தார் சரண்யா கூறியதாவது;

இந்த முகாமானது கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், கோவை கிழக்கு மண்டல தலைவரும் 52-வது மாமன்ற உறுப்பினருமான இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் பட்டா மாறுதல் முகாம் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான மாறுதல் பெற்ற பட்டாகான சான்றிதழ் மாலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து முகாமினை தலைமை தாங்கிய இலக்குமி இளஞ்செல்வி கூறியதாவது:-



இந்த முகாம் மக்களுக்கான முகாம், இதில் 52-வது சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் பட்டா பெயர் மாற்றத்தில் காலதாமதமாவதைக் குறிப்பிட்டதை தொடர்ந்து. கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று மக்களுக்கான இந்த பட்டா மாறுதல் முகாமினை அமைத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், இன்று மாலை பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் சான்றிதழ் மாலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...