வால்பாறையில் தென் இந்திய தோட்ட அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 30- சதவீத சம்பள உயர்வு வேண்டும் என வலியுறுத்தல்..!

தென்னிந்திய தேயிலை தோட்ட அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 15- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கோவை: தென்னிந்தியத் தேயிலைத் தோட்ட அலுவலர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் கோவை மாவட்டம்வால்பாறையை அருகே உள்ளமுடீஸ் தோட்ட அலுவலர்கள் மன மகிழ் மன்ற அரங்கில் நடைபெற்றது.

சங்கத்தின் தென் இந்தியத் தலைவர்கள் சுனில்குமார், ரிபெல்லோ, செயல் தலைவர் தாமஸ், பொதுச்செயலாளர் சிவானந்த சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூணாறு, ஹைவேவிஸ், கூடலூர் ஆகிய பகுதிகளில்தோட்ட தொழிலாளர்கள் கருத்துக் கேட்பு முடிவுற்ற நிலையில் தோட்ட அலுவலர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது.



இதில் தொழில்லார்களுக்கும் நிர்வாக தலைமைக்கும் பாலமாக இருக்கும் அலுவலகர்களுக்கு 2021-ல் 12% சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும், எதிர்வரும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை குன்னூர் உப்பாசியில் நடைபெற உள்ள நிலையில், 30-சதவீதம் உயர்த்தி வழங்கத் தொழிற்சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அலுவலர்கள் குடியிருப்புகள் பராமரிப்பு செய்யவேண்டும், ஒரு நிர்வாகத்தில் பணியாற்றி, மற்றொரு நிர்வாகத்தில் புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி பணியில் சேர்ப்பதால், தொடர்ந்து நீண்ட நாட்களாக பணியாற்றுபவர்கள் பதவி உயர்வு, மற்றும்பணப்பலன்கள் பாதிக்கப்படுவதால் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பள கணக்கு பட்டியல் உடனடியாக வழங்க வேண்டும், எரிவாயு சிலிண்டர் எஸ்டேட்களுக்கு வீடு வந்து சேர்வதற்கு ரூ.1100-வரை செலவாகிறது.

ஆனால் நிர்வாகம் ரூ.100 மட்டுமே வழங்குவதை உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் தோட்ட நிர்வாகங்கள் பணியாற்றிவரும் அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...