ஏப்ரல் 14 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை, வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தால், வார்டில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு இலவசமாக ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி 12வது வார்டில், சுயேச்சை கவுன்சிலராக உள்ளவர் ரங்கநாதன். இவர் தனது வார்டு மக்களிடையே குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது குறித்து, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும், வார்டு முழுவதும் எங்கேயும் குப்பைகள் இருக்கக்கூடாது என்பதற்காக தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக ரங்கநாதன், தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு ஒன்று தனது வார்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், வருகிற ஏப்ரல் 14 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து முறையாக தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தால்,குலுக்கல் முறையில் வார்டில்50 பேர் தேர்வு செய்யப்பட்டு வரும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இலவசமாக ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக, அறிவித்துள்ளார்.

சுற்றுலாவின் போது ஆகும் உணவு, போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் தானே பார்த்துக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த அறிவிப்பை, உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி உள்ளார். அதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை எது என்பது குறித்தும் தெளிவாக குறிப்பிட்டு அதை எவ்வாறு தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
சமையல் கழிவு, அழுகும் தன்மையுள்ள பழவகைகள், மிச்சமான உணவுப்பொருட்கள் அனைத்தும் மக்கும் குப்பை பை மூலமாகவும்,பிளாஸ்டிக் காகிதங்கள், டீ கப், பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்து போன கண்ணாடி பொருட்கள் ஆகியவை மக்காத குப்பை பயிலும் வைத்து அதனை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சுயேச்சை கவுன்சிலரின் இந்த முயற்சிக்கு, வார்டு மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு இலவசமாக ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக இவர் வெளியிட்ட அறிவிப்புக்கு வரவேற்பு வந்ததோடு, நிதி உதவி செய்யவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர், என்பது கூடுதல் சிறப்பு.
இது குறித்து கவுன்சிலர் ரங்கநாதன் கூறும் போது, எங்கள் வார்டில் மொத்தம் 500 குடும்பங்கள் உள்ளது. பொதுவாக குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல், ஆங்காங்கே கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவரவர், தங்கள் வீடுகளிலேயே முறையாக குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதை பழக்கப்படுத்தும் முயற்சியாக இந்த சுற்றுலா அறிவிப்பு திட்டத்தை துவங்கி உள்ளதாக, தெரிவித்துள்ளார்.
மேலும், குப்பைகளை எவ்வாறு உரமாக மாற்றுகிறார்கள் என்பது குறித்து சென்னை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள தரம் பிரிக்கும் மையங்களுக்கு சென்று பார்வையிட்டதாகவும், அவர் தெரிவித்தார். வரும் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று எங்கள் வார்டில், பொது இடங்களில் எங்கும் குப்பைகள் கிடக்காது, என்று உறுதிப்பட தெரிவித்தார்.