கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..!

திருமூர்த்தி என்பவருக்கு சாதியின் அடிப்படையில் மாற்று பணி வழங்கி உள்ள உத்திரவை ரத்து செய்திட வேண்டி 80-வது வார்டில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களால் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் 325-தூய்மை பணியாளர்களில் ஒருவரான திருமூர்த்தி என்பவரைச் சாதியின் அடிப்படையில் மாற்று பணி வழங்கி உள்ள உத்திரவை ரத்து செய்திட வேண்டி போராட்டம் நடத்தப்பட்டது.



அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையரிடன் இப்பிரச்சனை குறித்து மனு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 80-வது வார்டில் 325- தூய்மை பணியாளர்களில் ஒருவரான திருமூர்த்தி என்பவரை சாதியின் அடிப்படையில் மாற்று பணி வழங்கி உள்ள உத்திரவை ரத்து செய்திட வேண்டி 80-வது வார்டில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களால் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்குச் சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர் எவ்வித சம்பந்தமும் இல்லை ஆனால் தனபால் அவர்களைத் தவிர்த்து சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவரை மட்டும் பணி இடமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒருதலைபட்ச நடவடிக்கையாக உள்ளது. மேலும், இவருக்குப் பதிலாகப் பணி அமர்த்தப்பட்டுள்ள 65-வது வார்டு மேற்பார்வையாளர் ரவிக்குமார் என்பவர் மீது தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளது.



எனவே, மேற்பார்வையாளர் ரவிக்குமார் என்பவரை மாற்றி எந்தவித தவறும் செய்யாத சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர்க்கு பணியினை வழங்க வேண்டும் என்றும் இடமாற்றத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...