கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மீது திமுக உறுப்பினர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு..!

இதில் அதிமுக உறுப்பினர்கள் 100-சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் 100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.



அப்போது கோவை மக்களை வஞ்சிக்க கூடாது எனக் கூறி கோசங்களை எழுப்பிதால் திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் அதிமுகவினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து சக உறுப்பினர் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர்.

கோவை மாநகராட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு 100 சதவீத சொத்து வரியை கொண்டு வந்ததை கண்டித்து கேள்வி எழுப்பியதற்கு தாக்க முற்பட்டனர். ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வரி வசூல் செய்யக்கூடாது என முதல்வரின் தந்தை கூறியுள்ளார்.

ஆனால் அப்படி இங்கு யாரும் நடப்பது இல்லை, இது தான் திராவிட மாடலா? இந்த வரி வசூலை திமுக உறுப்பினர்கள் நியாப்படுத்தி பேசுகிறார்கள். இந்த ஆண்டு கோவை மாநகராட்சி 350 கோடி வசூல் செய்துள்ளது. தனியார் நிதி நிறுவனம் போல நடந்து கொண்டனர். மக்கள் வரி திணிப்பு செய்துள்ளனர்.

வாக்களித்த மக்களுக்காக நாங்கள் மாமன்ற கூட்டத்தில் குரல் கொடுத்தோம், இப்போதும் மக்களுக்கான இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் சொன்னதை அப்படியே படிக்கின்றனர். வரி உயர்வை நியாப்படுத்தி பேசுகின்றனர். உயர்த்தலாம் ஆனால் காலஅவகாசம் அளிக்காமல் இப்படி உடனடியாக ஏற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற சாதரண கூட்டத்தில் சொத்துவரிவிதிப்பினை குறித்து விவாதம் மற்றம் சந்தேகங்களை அதிமுகாவின் சார்பில் 47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன் வைக்கையில் மத்திய மண்டல தலைவர் மீனலோகு அவரை எதிர்த்து கடந்த ஆட்சியில் நடந்த சீர்கேடுதான் இதற்கு காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.



இதனை தொடர்ந்து அனைத்து திமுக உறுப்பினரும் மாமன்ற உறுப்பினர் பிரபாகரனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுகாவினை சார்ந்த மூன்று மாமன்ற உறுப்பினர்களும் மாமன்ற சாதரண கூட்டத்தினை புரகணித்து வெளியேரினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...