'டீ பிரியர்களுக்கு ஷாக்'... கோவையில் இன்று முதல் ஒரு டீ 15 ரூபாய்..!

மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, பேக்கரி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இன்று முதல் டீ விலை 15 ரூபாயாக உயர்த்தப்படுவதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் அவசர கூட்டம், இதன் தலைவரும் அரோமா பேக்கரி உரிமையாளருமான பொன்னுசாமி தலைமையில் நடந்தது.

கே.ஆர்.பேக்கரி பாலன், கேரமல் பேக்கரி கார்த்திக், ராகம் பேக்கரி செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேக்கரி செலவினங்கள் அதிகரித்துள்ளது பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் விலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீ விலையை உயர்த்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து தற்போதுள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை சமாளிக்க, டீ விலையை மட்டும் உயர்த்தலாம் என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன்படி ஒரு டீ 15 ரூபாய் என்ற விலை, இன்று முதல் கோவை மாவட்டத்தில் அமலில் இருக்கும், என்றார். இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...