"ஆப்ரேஷன் 2.0" ஓட ஓட விரட்டி பிடிக்கப்படும் கஞ்சா வியாபாரிகள்.. கோவையில் ஒரே நாளில் 11-கஞ்சா வழக்குகள் பதிவு..!

மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 11-கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13-பேர் கைது - சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,"ஆப்ரேஷன் 2.0" என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் "ஆப்ரேஷன் 2.0" என்ற பெயரில் போலீஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில் நேற்று ஒரே நாளில் 11 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்.எஸ் புரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காளிதாஸ் (22) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் பெரியார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுரேந்திரன் (26) என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர். மேலும் இரத்தினபுரி தபால் நிலையம் அருகே கஞ்சா விற்க முயன்ற கௌதம் (27) குணசேகரன் (29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் கஞ்சா விற்க முயன்ற மதன்குமார் (24) மற்றும் பாபு (25) ஆகிய இருவரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். புளியகுளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கண்ணன் என்பவரையும் ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் மாரியம்மன் கோயில் வீதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருஞானம் (51) என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். நஞ்சுண்டாபுரம் நொய்யல் ஆறு ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் (32) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் குனியமுத்தூர் டாஸ்மாக் கடை உள்ளே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரியாசுதீன் (33) என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அதேபோல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அபிஸ் (27) மற்றும் எஸ் ஹெச் எஸ் காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதிதன் (20) ஆகிய இருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

சரவணம்பட்டி கீரணத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முனீஸ்வரன் (25) சரணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஒரே நாளில் 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...