அடுத்தடுத்து தீ பிடிக்கும் 'இ-பைக்' : திருப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று இ-பைக் பேட்டரியில் இருந்து வந்த புகையால் பரபரப்பு..!

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து அதிக புகை வந்ததால், தீயணைப்பு துறையினர் வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே ஓடிக்கொண்டிருந்த இ-பைக்கின் பேட்டரி திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் அதிக புகை வருவதை பார்த்த பொதுமக்கள், அந்த வாகன ஒட்டியை வாகனத்தை நிறுத்தும்படி கூச்சலிட்டனர்.

அதை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி சென்ற நபர் உடனடியாக சாலையோரம், வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார்.

பின்னர், அந்த பேட்டரியில் இருந்து அதிக அளவிலான புகை வெளியே வந்தபடி தீ பிடித்து எரிய துவங்கியது. பின்பு அங்கு வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



பெட்ரோலுக்கு மாற்றான எலக்டிட்ரிக் வாகனங்களை பலர் வாங்க நினைத்து வரும் நிலையில், அவ்வப்போதுபேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...