அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சிறுமுகை அருகே விறகு அடுப்பில் சமைத்த போது, உடையில் தீ பிடித்து, 90-சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை சிறுமுகை இளகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி ராஜம்மாள் (83) இவர் தனது இளைய மகன் நாகராஜ் என்பருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாகராஜ் உடல் நலகுறைவால்மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த ராஜம்மாள் சுடுதண்ணீர் வைப்பதற்காக விறகு அடுப்பு பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்ததாகத் தெரிகிறது. தீ மளமளவென உடல் முழுவதும் பிடித்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் 90 சதவீத தீக்காயங்களுடன் அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ராஜம்மாள் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.