போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றநிலையில் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இரும்பு கடையில் செல்போன் திருட்டு வழக்கில் தேடப்பட்ட வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம், சேரன் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). இவர் அங்கு இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இவருடைய கடையில் கடந்த 4-ம் தேதி வந்த 3 பேர் செல்போனை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் பொள்ளாச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். இதில் தலைமறைவாக 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் பகுதியில்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
உடனே போலீசார் அந்த 2 பேரையும் துரத்திச்சென்று பிடித்து விசாரணை செய்ததில் கார்த்தி (வயது 28), கவுதம் (19) என்பதும், காளிதாஸ் இரும்பு கடையிலிருந்து செல்போன் திருடிய வழக்கில் தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.