கோவை துடியலூரில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு மயில் உயிரிழப்பு…!

கோவை துடியலூரில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலை, வனத்துறையினர் எடுத்துச் சென்று கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து எரியூட்டினர்.


கோவை: கோவை துடியலூரில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலை, வனத்துறையினர் எடுத்துச் சென்று கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து எரியூட்டினர்.

கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலறிந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள் மயிலை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். கோவை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள சிறிய தகனம் செய்யும் இயந்திரம் மூலம் மயில் எரியூட்டப்பட்டது.



கோவையில் அதிகளவு மயில்கள் இறப்பதால் அடக்கம் செய்வதற்கான இடம் விரையம் ஆவதால் இந்த சிறிய அளவிலான தகனம் செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...