கோவை எட்டிமடை அருகே தூக்கு போட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு -  கே.ஜி சாவடி போலீசார் விசாரணை….!

சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா?  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை எட்டிமடை அருகே உள்ள சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை எட்டிமடை அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியின் பின்புறம்,சேனாதிபதி பள்ளம் என்ற இடத்தில்அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மரத்தில் அமர்ந்தவாறு, தூக்கு போட்டு, அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாலும், இறந்தவர் சட்டையில் பான்மசாலா இருந்ததால் இறந்தவர் வடமாநில தொழிலாளரா?என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, தடவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...