கோவை சின்னியம்பாளையம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி…!

கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி. புதூர் அருகே அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சின்னியம்பாளையம் அருகே அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் தர்மராஜ் (21). ஐடி ஊழியரான இவர் இன்று மாலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது ஆர்.ஜி. புதூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து தர்மராஜ் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது உரசியதாக தெரிகிறது. 

இதில், நிலை தடுமாறி விழுந்த தர்மராஜ் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



மேலும், அரசு பேருந்தை இயக்கி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த ஓட்டுநர், சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐடி ஊழியர், அரசு பேருந்து விபத்தில் சிக்கிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பதிவுகளையும் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...