ரயில் மோதி யானை இறக்கும் விவகாரம் - கோவையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு….!

கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



ரயில் மோதி யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துள்ளது.



நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கி அமர்வு வழக்கை விசாரித்து வரும் நிலையில், தற்போது கோவை - பாலக்காடு ரயில்வே சாலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகிய மூன்று நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட வனத்துறை மற்றும் பாலக்காடு ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் கலந்துரையாடி ஆய்வு செய்து வருகிறார். மொத்தம், மதுக்கரை - வாளையாறு இடையே யானைகள் உயிரிழந்த 6 இடங்கள் கண்டறியப்பட்டது. அந்த இடங்களிலும், நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



அதை தொடர்ந்து, வாளையாறு ரயில்நிலையம் அருகே, நீதிபதி குழுவினர், ரயில்வே துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...