கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி - நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபரீதம்…!

கோவை ஈச்சனாரி - மலுமிச்சம்பட்டி சர்வீஸ் சாலையில்  கொண்டிருந்த போது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி நாய் மீது மோதிய தமிழரசன் சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


கோவை:கோவையில் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லையால் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, சாலைகளில் குறுக்கே திடீரென நாய்கள் வருவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் இல்லை உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலை நிலவி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் படி, இரு நாட்களுக்கு முன் கோவையில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தமிழரசன் (30). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தமிழரசன் பணியை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் ஈச்சனாரி - மலுமிச்சம்பட்டி சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென நாய் குறுக்கே வந்ததாக தெரிகிறது. 

இதில், நிலை தடுமாறி நாய் மீது மோதிய தமிழரசன் சாலையில் தூக்கி வீசப்பட்டு விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழரசன், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...