கோவை காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களில் காவல் ஆணையாளர் பிரதீப்குமார் ஆய்வு…!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடைபெற்ற காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களைத் தூய்மை செய்யும் பணிகளை காவல் ஆணையாளர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவல் நிலையங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் பயிற்சி பள்ளி வளாகம் ஆகியவை சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.



இதனைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் IPS.நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள மருத்துவமனை, மைதானம், பழைய கட்டிடங்கள் குடியிருப்பு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, என்பது குறித்தும் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து மாநகரில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீசாரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.



அப்போது ஆயுதப்படை வீரர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பணியின்போது என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்தெல்லாம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள காவலர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மாநகர போலீஸ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...