'ஜிஎஸ்டி' வரி உயர்வு எதிரொலி: கோவையில் இருந்து சென்னைக்கு காங்கிரசார் பாத யாத்திரை..!

தமிழ்நாடு காங்கிரஸ்‌ மனித உரிமை துறை நடத்தும்‌ ஜிஎஸ்டி பாதயாத்திரை கோயம்புத்தூர்‌ லிருந்து சென்னை வரை 550-கிமீ தூரம்‌, 18-நாட்கள்‌ நடைபெறவுள்ளது.



கோவை: தமிழ்நாடு காங்கிரஸ்‌ மனித உரிமை துறை நடத்தும்‌ 550-கிமீ ஜிஎஸ்டி பாதயாத்திரை கோயம்புத்தூர்‌ லிருந்து சென்னை வரை 550-கிமீ தூரம்‌, 56-தோழர்களுடன் ‌18-நாட்கள்‌ நடைபெறவுள்ளது.

தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர்‌, ஏப்ரல்‌ 7, 2022 - தமிழ்நாடு காங்கிரஸ்‌ மனித உரிமை துறை சார்பாக பெட்ரோல்‌, டீசல்‌ விலையை ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள்‌ கொண்டு வரவும்‌, சமையல்‌ கேஸ்‌ சிலிண்டர்‌ விலையை குறைக்க வலியுறுத்தி கோயம்புத்தூர்‌ லிருந்து சென்னை வரை 550 கிமீ தூரம்‌, 56 தோழர்களுடன்‌ 18 நாட்கள்‌ ஜிஎஸ்டி பாதயாத்திரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ்‌ மனித உரிமை துறை தலைவர்‌ “புரட்சி தோழர்‌” மகாத்மா ஸ்ரீனிவாசன்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ள ஜிஎஸ்டி பாதயாத்திரைவரும்‌ ஏப்ரல்‌ 11 ஆம்‌ தேதி கோவை ரெட்‌- க்ராஸ்‌ பில்டிங்‌ அருகிலிருந்து, காலை 10 மணியளவில்‌ தொடங்கவுள்ளது.

பெட்ரோல்‌, டீசல்‌ விலையை ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள்‌ கொண்டு வரவும்‌, சமையல்‌ கேஸ்‌ சிலிண்டர்‌ விலையை குறைக்க வலியுறுத்தியும்‌, மக்கள்‌ அதிக அளவில்‌ பயன்படுத்தும்‌ அத்தியாவசிய பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகளுக்கு அதிக ஜிஎஸ்டி வரி விதிக்கபடுவதையும்‌ ஆடம்பர பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகளுக்கு குறைந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்தும்‌ பாதயாத்திரையின்போது மக்களை சந்தித்து ஜிஎஸ்டி பற்றிய விழிப்புணர்வு மற்றும்‌ மத்திய அரசின்‌ தவறான பொருளாதார கொள்கைகள்‌ குறித்து எடுத்துரைக்கப்படும்‌.

தமிழக காங்கிரஸ்‌ கமிட்டி தலைவர்‌ கே.எஸ்‌.அழகிரி‌ ஜிஎஸ்டி பாதயாத்திரையை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்க உள்ளார்‌. நிகழ்ச்சியில்‌, தினேஷ்குண்டுராவ்‌, எம்‌எல்‌ஏ, AICC தேசிய பொது செயலாளர்‌ மற்றும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கட்சியின்‌ பொறுப்பாளர்‌, ஸ்ரீவல்லபிரசாத்‌,AICC தேசிய செயலாளர்‌ மற்றும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கட்சியின்‌ பொறுப்பாளர்‌, கு.செல்வப்பெருந்தகை எம்‌எல்‌ஏ., தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ்‌ கட்சி குழுத்‌ தலைவர்‌, ரூபி

ஆர்‌.மனோகரன்‌, பொருளாளர்‌ - தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி, மற்றும்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்கள்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌ கலந்து கொண்டு சிறப்பிக்கும்‌ இந்த பாதயாத்திரையின்‌ தொடக்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ செயல்‌ தலைவர்‌ மயுராஜெயக்குமார்‌ முன்னிலை வகிக்கிறார்‌.

தமிழ்நாடு காங்கிரஸ்‌ ஊடக துறை தலைவர்‌ திரு.௮. கோபண்ணா வரவேற்புரையில்‌ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மேலும்‌ நிகழ்ச்சியில்‌, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி தலைவர்கள்‌, காங்கிரஸ்‌ நாடாளுமன்ற மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புக்கான காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌, முன்னாள்‌ நாடாளுமன்ற மற்றும்‌ சட்டமன்ற காங்கிரஸ்‌, காங்கிரஸ்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்கள்‌, காங்கிரஸ்‌ தொண்டர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

38 நாட்கள்‌ நடைபெறும்‌ இந்த ஜிஎஸ்டி பாதயாத்திரை கோயம்புத்தூரில்‌ தொடங்கி திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, அரூர்‌, செங்கம்‌, போளூர்‌, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம்‌, ஸ்ரீபெரும்புதூர்‌, பூவிருந்தவல்லி ஆகிய நகரங்களை கடந்து ஏப்ரல்‌ 28-ஆம்‌ தேதி சென்னை, சத்தியமூர்த்தி பவனில்‌, மாலை 4 மணியளவில்‌ காங்கிரஸ்‌ கட்சி தலைவர்கள்‌ வாழ்த்துரையுடன்‌ வெற்றியடைகிறது.

இந்திய பிரதமர்‌, நரேந்திரமோடிக்கு 56-அங்குல மார்பு என்றால்‌ காங்கிரசுக்கு 56 அங்குல இதயம்‌ இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ்‌ கட்சியின்‌ தலைவர்‌ ராகுல்‌ காந்தி கூறியதற்கேற்ப ஜிஎஸ்டி பாதயாத்திரையில்‌ 56 தமிழ்நாடு காங்கிரஸ்‌ மனித உரிமை துறை தோழர்கள்‌ பங்கு பெற உள்ளனர்‌.

மத்தியில்‌ ஆளும்‌ பாஜக அரசின்‌ தவறான பொருளாதார கொள்கைகளால்‌, இன்று பெட்ரோல்‌, டீசல்‌ மற்றும்‌ சமையல்‌ எரிவாயுவின்‌ விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌, பெரு நிறுவனங்கள்‌, வணிகர்கள்‌, விவசாயிகள்‌, மீனவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பெருமளவில்‌ தொடர்ந்து பாதிப்பு அடைந்து வருகின்றனர்‌.

இதற்கு ஒரே தீர்வு, பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலையை ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்குள்‌ கொண்டு வரவேண்டும்‌ என்பது தான்‌.

தற்போது, மக்கள்‌ வாங்கும்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலையில்‌ சுமார்‌ 52 % வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு விதிக்கும்‌ எக்சைஸ்‌ வரி யுடன்‌, மாநில அரசு விதிக்கும்‌ வாட்‌ வரி, மேலும்‌ இதனுடன்‌ டீலர்கமிஷன்‌ மற்றும்‌ சரக்கு கட்டணம்‌ போன்றவை பெட்ரோல்‌ டீசல்‌ விலையை நிர்ணயிப்பவையாக இருந்த போதிலும்‌, நாட்டின்‌ பொருளாதாரம்‌ மற்றும்‌ பொது மக்களை பாதிக்கும்‌ இந்த வரிகளை ஒருங்கிணைப்பது தற்போது மிகவும்‌ அவசியமாகும்‌

பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலைகள்‌ ஜிஎஸ்டிவரிகட்டமைப்புக்குள்‌ வரும்‌ போது ஜிஎஸ்டி யின்‌ அதிகபட்ச வரியான 28% மட்டுமே இருக்கும்‌. இதனால்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலை தற்போதைய விலையை விட சுமார்‌ பாதி விலைக்கு மட்டுமே விற்க வாய்ப்புள்ளது.

இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ்‌ மனித உரிமை துறை சார்பாக புரட்சி தோழர்‌ மகாத்மா ஸ்ரீனிவாசன்‌ தலைமையில்‌ பெட்ரோல்‌ டீசல்‌ மற்றும்‌ சமையல்‌ எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மத்தியில்‌ மோடி தலைமையிலான ஆட்சியை கண்டித்து 56 பேருடன்‌ 12 நாட்கள்‌ சென்னை முதல்‌ கன்னியாகுமரி வரை 900 கிமீ தூரம்‌ வெற்றிகரமாக சைக்கிள்‌ பேரணி நடத்தியுள்ளார்‌.

2019 ஆம்‌ ஆண்டு மத்தியில்‌ ஆளும்‌ மோடி ஆட்சியை கண்டித்து மாபெரும்‌ உண்ணாவிரத போராட்டத்தை சென்னை வள்ளுவர்‌ கோட்டம்‌ அருகே சுமார்‌ 1500 தோழர்களுடன்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கட்சி தலைவர்‌, கட்சியின்‌ மூத்த தலைவர்கள்‌ மற்றும்‌ தோழமை கட்சி தலைவர்கள்‌ வாழ்த்துரை வழங்க சிறப்பாக நடத்தினார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...