2-ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய 'கோவை விழா' : "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வு துவக்கம்..!

விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தனர்.



கோவை: கோவை விழாவின் முக்கிய நிகழ்வான "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



கோலாகலமாக துவங்கியது கோவை விழா 2-ஆண்டுகளுக்கு இடைவெளிக்குப் பிறகு கோவை விழா நடைபெறும் நிலையில், கலைப்படைப்புகளின் கண்காட்சியுடன் இன்று விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது.



கோவையின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா நடைபெறாத நிலையில் இவ்வாண்டிற்கான விழா ஏப்ரல் 9 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கஸ்மோபாலிட்டன் கிளப் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, ஆகியோர் நிகழ்வுகளைத் துவக்கி வைத்தனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்ட்ரீட் ஆர்ட்"நிகழ்வை துவக்கி வைக்கப்பட்டது.



இந்த "ஆர்ட் ஸ்ட்ரீட்" நிகழ்வில் 75 கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்குச் சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கலைப்படைப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை விழாவினை மக்கள் சிறப்பிக்கும் வகையில் “இண்டராக்டிவ் இஸ்டலேஸன்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இண்டராக்டிவ் இஸ்டலேஸன் என்பது தேவையற்ற நெகிழிகளில் வண்ணம் பூசப்பட்டு அதனைக் கலைப்படைப்பாக மாற்றும் வகையில் மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், 14,000 விரல் ரேகைகளைக்கொண்டு உலக சாதனையும் நிகழ்த்தப்படுகின்றது. இதைத்தொடர்ந்து கோவை வாலாங்குளம் குளக்கரையில் இன்று மாலை லேசர் ஷோ ஒளிக்கண்காட்சி துவக்கி வைக்கப்படுகிறது. இதே போல் வருகிற 17ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.











Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...