'காச நோய் இல்லாத கோவை' - விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற அனைவரும் "TB Free COIMBATORE" என்ற டி.சர்ட் அணிந்தவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.



கோவை: காச நோய் ஒழிப்பு திட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



தேசிய காசநோய் தினம் மார்ச் மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி 30 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் காசநோய் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு பேரணி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை அரசு அமல்படுத்தி அதற்காக 6,467 லட்சம் நிதியையும் ஒதுக்கி உள்ளது. காசநோய் இல்லாத 2025-ல் தமிழகம் என்ற இலக்கை எட்டும் விதமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்டத்தில்நடைபெற்றது. இந்த பேரணியைக் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்ட செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள், தனியார் அமைப்புகளும் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற அனைவரும் "TB Free COIMBATORE" என்ற டி.சர்ட் அணிந்தவாறு பேரணியில் கலந்து கொண்டனர். ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவில் அருகில் துவங்கப்பட்ட இந்த பேரணியானது ரேஸ் கோர்ஸ் சுற்றிலும் நடைபெற்றது.



இதில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மக்களுக்கு காச நோய் ஒழிப்பு திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் பதாகைகளைக் கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...