கோவை, கரூர் என் இரு கண்கள் - கோவை கொடிசியா தொழில்துறை கண்காட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை கொடிசியாவில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறும் "பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் 2022" கண்காட்சிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: கோவை கொடிசியாவில் "பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் 2022" கண்காட்சிகள் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகின்றது.



இக்கண்காட்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி இன்று மாலை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



இந்த கண்காட்சியில் கட்டுமான பொருட்கள், மின்சார பொருட்கள், கட்டுமான எந்திரங்கள், வாகனங்கள், விவசாய எந்திரங்கள் என முன்னணி நிறுவனங்கள் முதல், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பொருட்கள் என 460 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.



இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், 12 மணி நேரம் தொழில் அமைப்பினருடன் இன்று பயணம் மேற்கொண்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பயனுள்ள நிகழ்வாக இது அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.



கோவை வரலாற்றில் எல்லாருக்கும் பயன் உள்ள கண்காட்சியாக இது அமையும். இங்கு கரூர் பகுதி மக்களும் வந்துள்ளதாக கூறிய அவர்,

முதல்வர் கோவைக்கு தனிக்கவனம் எடுத்து வருகிறார் என்றும் இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கரூரில் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், முதல்வர் வழிகாட்டுதலின்படி கோவை வந்துள்ளதாக கூறினார். கரூரும் கோவையும் தனக்கு இரண்டு கண்கள் போன்றவை, என தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் வர்த்தகம் மூலம் பயன்பெற உள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



இவ்விழாவில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...