கோவையில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த, சிறுமியின் 23 வயது உறவினரான நபரை, பேரூர் போலீசார் போக்சோவில் கைது.
கோவை: கோவையில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்போட்டுள்ளது. இதையடுத்து, மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது, சிறுமியின் உறவினரான பூளுவப்பட்டியை சேர்ந்த 23 வயது இளைஞர் மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரித்த பேரூர் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.