சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரிடம் கோவை தொழில் அமைப்புகளின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள்‌ முன்வைக்கப்பட்டது..!

மூலப்பொருள் விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசை வலியுறுத்திட வேண்டியும், கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டியும், பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



கோவை: சென்னை தலைமை செயலகத்தில் கோவை தொழில் அமைப்புகளின் சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக முதலமைச்சரை சந்தித்தனர்.

இதுகுறித்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-

கோவை தொழில் அமைப்புகள் சார்பில் மூலப்பொருள் விலையேற்றம் தடுக்க மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தோம் குறுந்தொழில் முனைவோர்களின் நலன் கருதி கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டியும் கோரிக்கை முன் வைத்தும் முதல் அமைச்சரிடம் பேசினோம்.

முதல்வர் சந்திப்பில் கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, 'சீமா' தலைவர் கார்த்திக், டாக்ட் தலைவர் ஜேம்ஸ், டான்சியா துணை தலைவர் சுருளிவேல் கொடிசியா முன்னாள் தலைவர்கள் சுந்தரம், ராமமூர்த்தி, காட்மா தலைவர் சிவக்குமார் லகுஉத்யோக்பாரதி, தலைவர் சிவக்குமார். IIF தலைவர் முத்துக்குமார், உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் இருந்தார்கள். முதல்வருடன் அமைச்சர் பெருமக்கள் செந்தில்பாலாஜி தென்னரசு தாமோதரன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.

தங்களின்‌ அரசு தமிழகத்தின்‌ வளர்ச்சிக்காக துறை சார்ந்து குழுக்களை அமைத்து அதில்‌ உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வுக்கான வழிகாட்டி வருவது பெரும்‌ மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தியாவில்‌ தமிழகத்தை அனைத்து துறைகளையும்‌ முன்னணியாக மாற்றி நமது மாநிலம்‌ முதன்மை மாநிலமாக மாற்றும்‌ தங்களின்‌ முயற்சிக்குத் தமிழகமே தங்களின்‌ வழிகாட்டல்‌ படி இயங்கிடுவோம்.‌

நமது மாநிலத்தில்‌ தொழில்‌ சார்ந்த பிரச்சனைகளை தங்கள்‌ அரசு கண்டு அறிந்து இடர்களை நீக்கி தொழில்‌ வளர்ச்சிக்கான தங்கள்‌ அமைத்த சுந்தரதேவன்‌ IAS (ஓய்வு) அவர்களின்‌ தலைமையில்‌ அமைத்த கமிட்டி தொழில்‌ நகரங்களில்‌ தொழில்‌ முனைவோர்களிடம்‌ கலந்து உரையாடி தொழில்களுக்கு உள்ள பிரச்சனைகளைக் கேட்டு அறிந்து தங்களிடம்‌ அறிக்கை சமாப்பித்து உள்ளதையும்‌ தங்கள்‌ அதன்‌ மூலம்‌ தொழில்‌ சார்ந்த எங்கள்‌ பிரச்சனைகளுக்கு தீர்வுகானவும்‌ தங்கள்‌ எடுத்து வரும்‌ நடவடிக்கைகளுக்கு எங்கள்‌ சங்கமான டாக்ட்‌ கோவை கிளையின்‌ சார்பில்‌ கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

தங்களின்‌ மேலானா உதவிகள்‌ கோரி குறுந்தொழில்களின்‌ வளர்ச்சிக்காக கீழ்கண்ட கோரிக்கைகள்‌ முன்வைக்கிறோம்‌.

1. தொழில்‌ நகரமான கோவையில்‌ தங்கள்‌ அரசு சார்பில்‌ ஜாப்‌ஆடர்கள்‌ மற்றும்‌ உதிரிப்பாகங்கள்‌ செய்து வரும்‌ தொழில்‌ முனைவோர்களுக்காகக் கோவை நகா்‌ பகுதியிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவில்‌ அரசுக்குச் சொந்தமான இடங்களிலும்‌, தனியாருக்கு சொந்தமான தருசு நிலங்களைக் கையகப்படுத்தி 1/2 கிரவுண்டு முதல்‌ 1 கிரவுண்டு வரை பிரித்தும்‌ 1000யிரம்‌ ஸ்கொயார்பிட்டில்‌ அடுக்கு மாடிகள்‌ அமைத்து தொழில்‌ கூடங்களை கட்டி கொடுத்தும்‌ அதை குறுந்தொழில்‌ முனைவோர்கள்‌ மாத தவனை முறையில்‌ செலுத்திடும்‌ வகையில்‌ கடன்‌ உதவி பெற்று தந்திடவும்‌ அதன்‌ மூலம்‌ கோவையில்‌ குறுந்தொழில்‌ முனைவோர்கள்‌ கிளஸ்டர்‌ அமைத்து ஆடர்களை பொதுத் துறை மற்றும்‌ தனியார்த்‌ துறையில்‌ பெற்றுச் செய்து கொடுத்திடவும்‌ தொழில்‌ வளர்ச்சி கண்டிடவும்‌ தங்கள்‌ அரசு வழிகாட்ட வேண்டுகிறோம்‌.

தாய்கோ வங்கி மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலம்‌ தொழில்‌ முனைவோர்களுக்கான தனிகடன்‌ திட்டம்‌ கோரி:-

2. இந்தியாவில்‌ எங்கும்‌ இல்லாத அளவுக்கு நமது தமிழகத்தில்‌ ஜாப்‌ஆடர்கள்‌ செய்து கொடுக்கும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ லட்சக்கணக்கில்‌ உள்ளனர்.‌ இவர்கள்‌ கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றாலும்‌, மூலப்பொருள்‌ விலை ஏற்றத்தாலும்‌ ஜாப்‌ஆடர்கள்‌ கிடைக்கப் பெறமுடியாமல்‌ முடங்கிக் கிடக்கிறார்கள்‌ மத்திய அரசு அளித்த கடன்‌ திட்டம்‌ கூட இவர்களுக்கு உதவிடவில்லை கடந்த ஆட்சியாளர்களும்‌ உதவிட முன்‌ வரவில்லை தங்கள்‌ அரசு கனிவுடன்‌ எங்கள்‌ கோரிக்கையைப் பரிசீலித்து தங்கள்‌ அரசுக்குச் சொந்தமான தாய்கோ வங்கியின்‌ மூலமாகவும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாகவும்‌ நடப்பு மூலதன கடனாகக் குறைந்த பட்சம்‌ குறைந்த வட்டியில்‌ 2 லட்சம்‌ வரை வழங்கிட வேண்டுமாய்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக் கொள்கிறோம்‌.

GST அபராத வட்டி தள்ளுபடி செய்திட மத்திய அரசை வழிமறித்திடக் கோரி:-

3. நமது நாட்டில்‌ GST அமுலாக்கத்துக்குப் பிறகு குறுந்தொழில்‌ மற்றும்‌ சிறு தொழில்‌ முனைவோர்கள்‌ எண்ணற்ற கஷ்டங்களைத் தொடர்ந்து பட்டு வருகிறோம்‌ 2017 முதல்‌ 2021 ஆகஸ்ட்‌ மாதம்‌ வரை GST நாங்கள்‌ காலதாமதமாகக் கட்டிய தொகைக்கு அபராத வட்டி கேட்டு இப்போது ஒவ்வொரு தொழில்‌ முனைவோர்களுக்கும்‌ ஆயிரக்கணக்கான ரூபாய்களை அபராத வட்டியாகச் செலுத்தச் சொல்லி அதிகாரிகளால்‌ நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.‌ ஜாப்‌ஆடர்கள்‌ மற்றும்‌ உதிரிப் பாகங்கள்‌ செய்து வரும்‌ தொழில்முனைவோர்களும்‌ பொதுத் துறை நிறுவனங்களும்‌ தனியார்த்‌ துறை நிறுவனங்களும்‌ நாங்கள்‌ செய்து கொடுக்கும்‌ வேலைகளுக்கு 90 நாட்கள்‌ முதல்‌ 180 நாட்கள்‌ வரை பில்கான தொகை தருவதற்குக் கால அவகாசம்‌ எடுத்துக் கொள்வதால்‌ குறித்த தேதிகளில்‌ குறு சிறு தொழில்‌ முனைவோர்கள்‌ GST கட்ட முடியாமல்‌ காலம்‌ தாழ்த்தி செலுத்தும்‌ நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதால்‌ தான்‌ நாங்கள்‌ காலம்‌ கடந்து செலுத்தி வருகிறோம்‌. அதற்கான நாள்‌ ஒன்றுக்குக் காலதாமதமான நாட்களுக்கு அடுத்து வரும்‌ மாதங்களில்‌ கால தாமதத்துக்கான கட்டணம்‌ செலுத்தியும்‌ தற்போது அபராத வட்டி தனியாகச் செலுத்திட அதிகாரிகள்‌ வழியுறித்தி வருவதால்‌ தங்கள்‌ அரசு GST கவுன்சில்‌ மூலமாக அபராத வட்டிகள்‌ தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து குறு சிறு தொழில்களைப் பாதுகாத்திட வேண்டுகிறோம்‌.

மின்சார கட்டணத்தில்‌ சலுகை கோரி:-

4. நமது மாநிலத்தில்‌ ஜாப்‌ஆடர்கள்‌ மற்றும்‌ உதிரிப்பாகங்கள்‌ செய்து கொடுத்து வரும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்களுக்கு தங்கள்‌ அரசு மாணியவிலையில்‌ குறைந்த கட்டணத்தில்‌ மின்சார வழங்கிட வேண்டுகிறோம்‌ கடுமையான நெருக்கடியில்‌ உள்ள குறுந்தொழில்களைப் பாதுகாத்திடவும்‌ பயன்படுத்தும்‌ மின்சாரத்தில்‌ சலுகை கிடைக்கும்‌ பட்சத்தில்‌ குறுந்தொழில்‌ முன்னேற்றத்துக்கு மிகப்பெரும்‌ உதவியாக இருக்கும்‌ குறைந்த பட்சம்‌ 25 HP வரை பயன்படுத்தி உற்பத்தித் துறையில்‌ ஈடுபட்டு வரும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு இந்த சலுகை வழங்கிட தங்கள்‌ அரசைத் தாழ்மையுடன்‌ கேட்டுக் கொள்கிறோம்‌.

தமிழகத்தில்‌ உள்ள பொதுத் துறை தனியார்த்‌ துறையிடம்‌ ஆடர்கள்‌ பெற்றுத் தருவது சம்மந்தமாக:-

5. நமது மாநிலத்தில்‌ உள்ள பொதுத் துறை மற்றும்‌ தனியார்த்‌ துறை தொழில்‌ சார்ந்த நிறுவனங்களிடம்‌ இருந்து நேரடியாக 25 % சதம்‌ வரை குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு ஜாப்‌ஆடர்களையும்‌ உதிரி பாகங்கள்‌ தயாரிப்புக்கான ஆடர்களை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்‌.

மாவட்ட வாரியாக கமிட்டி அமைத்திடக் கோரி:-

6. தமிழகத்தில்‌ ஒவ்வொரு மாவட்டமும்‌ தனித்தன்மையுடன்‌ தொழில்‌ வளர்ச்சி அரசின்‌ துணையுடன்‌ முன்னேற்றம்‌ கண்டு வருகிறது. தொழில்களின்‌ முன்னேற்றங்களையும்‌ தொழில்‌ வளர்ச்சிக்கு உள்ள தடைகளை நீக்கிடவும்‌ மாதம்‌ தவறாமல்‌ அந்த அந்த மாவட்ட ஆட்சியாளர்கள்‌ தலைமையில்‌ பிரதான தொழில்‌ அமைப்புகளின்‌ பிரதிநிதிகளையும்‌ துறை சார்ந்த உயர்‌ அதிகாரிகளையும்‌ உள்ளடக்கிய கமிட்டிகள்‌ மாவட்டம்‌ வாரியாக அமைத்திடவும்‌ வேண்டுகிறோம்‌.

வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ நிதி நிறுவனங்களிடம்‌ இருந்து குறுந்தொழில்‌ முனைவோர்களைப் பாதுகாத்திடக் கோரி:-

7. குறு சிறு தொழில்‌ முனைவோர்களைப் பாதுகாத்திட மத்திய அரசிடம்‌ தங்கள்‌ அரசு வழியுறித்திட வேண்டுகிறோம்‌ 2020-ம்‌ ஆண்டு முதல்‌ இன்றைக்கு வரையிலும்‌ தமிழகத்தில்‌ குறு சிறு தொழில்கள்‌ முடக்கப்பட்டு உள்ளன இந்த சூழ்நிலையில்‌ மூலப்பொருள்களின்‌ விலை ஏற்றம்‌ எவ்விதமான தடைகளும்‌ இல்லாமல்‌ கண்மூடித்தனமாக உயர்த்தி வருகிறார்கள்‌ ஆகையால்‌ தொழில்‌ துறை சம்பித்து உள்ளது வங்கிக் கடன்கள்‌ கட்ட முடியாமலும்‌ தனியார்‌ நிதி நிறுவனங்களிடம்‌ பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமலும்‌ குறு சிறு தொழில்‌ முனைவோர்கள்‌ கடுமையான நெருக்கடியிலிருந்து வரும்‌ நிலையில்‌ வங்கிகளின்‌ மூலமாகப் பெற்ற அனைத்து கடன்களைத் திருப்பி செலுத்த ஒரு ஆண்டுகளுக்குக் கால அவகாசம்‌ பெற்று தர தங்கள்‌ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுவதுடன்‌ 2020 -ம்‌ ஆண்டு முதல்‌ 2023-ம்‌ ஆண்டு வரைக்கான வட்டிகள்‌ அபராத வட்டிகளின்‌ அனைத்தும்‌ தள்ளுபடி செய்திடவும்‌ தங்கள்‌ அரசு மத்திய அரசை வழியுறித்தி பெற்றுத் தந்திட வேண்டுகிறோம்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...