சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க கோரி மதிமுக மாவட்ட நிர்வாகிகள்‌ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!‌

உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை பொதுமக்களின்‌ நலன்‌ கருதி சரிபாதியாக குறைக்க வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர்‌ மாவட்ட நிர்வாகிகள்‌ கூட்டம்‌ 07.04.2022ம்‌ நாள்‌ வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில்‌ கோவை சித்தாபுதார்‌, ம.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகத்தில்‌, மாநில தேர்தல்‌ பணி துணைச்‌ செயலாளர்‌ அ.சேதுபதி தலைமையில்‌ நடைபெற்றது.

கூட்டத்தில்‌ மாவட்டச் செயலாளர்‌ ஆர்‌.ஆர்‌.மோகன்‌ குமார்‌ சிறப்புரை ஆற்றினார்‌.

இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டவர்கள்‌:-

உயர்நிலைக்குழு உறுப்பினர்‌ ஆடிட்டர்‌ அர்ஜுன்ராஜ்‌, மாவட்ட பொருளாளர்‌ சூரி நந்தகோபால்‌, மாவட்ட துணைச்‌ செயலாளர்கள்‌ கணபதி செல்வராசு, ஆர்‌. சற்குணம்‌, எஸ்‌. துயமணி, பகுதி செயலாளர்கள் எஸ்‌.பி. வெள்ளிங்கிரி, ௧. தங்கவேல்‌, பொ.சு. முருகேசன்‌, மு. ராமநாதன்‌, எல்‌.லூயீஸ்‌, கோட்டை அக்கீம்‌, கே. பழனிச்சாமி, ச.ப. விசுவராஜ்‌, வெ.சு. சம்பத்‌, குனிசை சண்முகம்‌, அப்துல்பாரி, மாலிக்பாய்‌ தீர்மானக்குழு உறுப்பினர்‌: மு. கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்‌ பேங்க்‌ குமாரசாமி, பெ. முருகேசன்‌, கூ. விஜயகுமார்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ சித்ரா வெள்ளியங்கிரி, சித்ரா தங்கவேல்‌, அன்பு (௭) தர்மராஜ்‌ பொதுக்குழு உறுப்பினர்கள்‌ பயனியர்‌ தியாகு, மார்க்கெட்‌ செல்வம்‌, சாகுல்‌ அமீது, அணிகளின்‌ அமைப்பாளர்கள்‌ ஜி.பி. அருள்‌, பாபுமுருகன்‌, தமிழ்‌ முடி உள்ளிட்டோர்‌ கலந்து கொண்டனர்‌.

இக்கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட‌ தீர்மானம்‌:-

தமிழக அரசு சொத்துவரியை (150%) நூற்றி ஐம்பது சதவீதம்‌ வரை உயர்த்தி உள்ளது. இதனால்‌ அனைத்து தரப்பு மக்களும்‌ கடுமையாகப் பாதிப்பு அடைவார்கள்‌.

கடந்த 2 வருடங்களாக தொழில்துறை கடமையான நெருக்கடிக்கும்‌ ஆளாகி உள்ளது. தொழிலாளிகள்‌ வேலை இழப்பிற்கு ஆளாகி உள்ளார்கள்‌. வியாபாரிகள்‌ கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளனர்‌.

மக்கள்‌ பொருளாதார நெருக்கடியால்‌ தவித்து வருகின்றனர்‌. இந்த நிலையில்‌ சொத்து வரி உயர்வால்‌ வீட்டு வாடகை, கடை வாடகை, சிறு, குறு, நடுத்தர தொழில்‌ செய்யும்‌ கட்டிடங்களின்‌ வாடகை உயர்த்தப்படும்‌.

இதனால்‌ அனைவரும்‌ கடுமையான பாதிப்புக்குள்ளவார்கள்‌. எனவே உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை பொதுமக்களின்‌ நலன்‌ கருதி சரிபாதியாக குறைக்க வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்திக்‌ கேட்டுக்‌கொள்ளப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...