தனது வீட்டு அருகே உள்ள தண்ணீர் டேங்கில் கை, கால் கழுவிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு காலில் கடித்தது விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே காதருத்தான் மேடு பகுதியில் பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள காதருத்தான் மேடு பகுதியில் உள்ள தோட்டத்துச் சாலையில் வசித்து வந்தவர் காளிமுத்து வயது (75). விவசாயியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தண்ணீர் டேங்கில் கை, கால் கழுவிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு விஷப்பாம்பு காளிமுத்துவின் காலில் கடித்தது கூறப்படுகிறது.
இதனை அடுத்து 108-ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் காளிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக காளிமுத்து உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.