வ.ஊ.சி.நகர் உலக தமிழ்‌ செம்மொழி பூங்காவில்‌ நடைப்பெற்ற சிறப்பு தூய்மைப்பணிகளை கோவை மேயர்‌ ஆய்வு செய்தார்‌..!

தற்போது பூங்காவில்‌ உள்ள தேவையற்ற செடி கொடிகள்‌, புதர்களை அகற்றுதல்‌, தேங்கிய குப்பைகள்‌ மற்றும்‌ களைச்செடிகள்‌ அகற்றி சுத்தம்‌ செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16-க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ வ.ஊ.சி.நகர் உலக தமிழ்‌ செம்மொழி பூங்காவில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று (08.04.2022) தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.16க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ வ.ஊ.சி.நகர் உலக தமிழ்‌ செம்மொழி பூங்கா நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்தது, தற்போது பூங்காவில்‌ உள்ள தேவையற்ற செடி கொடிகள்‌, புதர்களை அகற்றுதல்‌, தேங்கிய குப்பைகள்‌ மற்றும்‌ களைச்செடிகள்‌ அகற்றி சுத்தம்‌ செய்யப்படுகிறது.



மேலும்‌, மாநகராட்சியின்‌ 100-வார்டுகளுக்குட்பட்ட பயன்பாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேற்கொள்ளப்படவேண்டும்‌. அதன்‌ பின்னர்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளார்‌ மோ.ஷா்மிளா, மேற்கு மண்டல குழு தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, 16-வது வார்டு மாமன்ற உறுப்பினா்‌ தமிழ்செல்வன்‌, 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ ஆர்‌.காயத்திரி, மேற்கு மண்டல்‌ உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மண்டல சுகாதார அலுவலா்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளா்‌ சந்திரசேகர் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌, தூய்மை பணியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...