45-வயது தோற்றத்தை கொண்ட 20-வயது இளம்பெண்ணுக்கு கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (காஸ்மெட்டிக்) ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவை: அறுவை சிகிச்சை முடிந்த பின் இப்போது புதுமையான தோற்றப் பொலிவோடு இந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளார். புதுமையான இந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை முதல்வர் நிர்மலா வெகுவாக பாராட்டினார்.
நான்கு மாதங்களுக்கு முன் 20-வயது பெண் ஒருவர் தனது முகம் 45-வயது போல் தோற்றம் அளிப்பதாகவும், இடது புருவத்தில் முடி உதிர்ந்து விட்டதாகவும், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு PARRY ROMBERG SYNDROME என்ற அரிதான வகைநோய் இருப்பதைக் கண்டறிந்தனர்.
PARRY ROMBERG SYNDROME வியாதி என்றால் என்ன?
இது ஒரு அரிதான தன்னெதிர்ப்பு நோயாகும் முகத்தில் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும் தோலில் சுருக்கங்களுடனும் கொழுப்பு திசு அறவே நீங்கியும் வயதான தோற்றம் கொண்டு இருப்பார்கள்.
சில சமயம் புருவத்தில் முடியில்லாமல் கூட இருப்பார்கள். சிகிச்சைக்கு வந்த பெண் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை
அவரை பரிசோதித்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவருக்கு FAT GRAFTING (கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை) மற்றும் HAIR TRANSPLANTATION (முடி மாற்று அறுவை சிகிச்சை) செய்தார்கள்.
FAT GRAFTING என்றால் என்ன?
நமது உடலில் வயது மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை உறிஞ்சி எடுத்து முகத்தில் செலுத்துவதே FAT GRAFTING ஆகும்.
HAIR TRANSPLANTATION என்றால் என்ன?
நமது பின் தலையில் உள்ள முடி வேர்களை தனியாகப் பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையே முடி மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளையும் இந்த பெண்ணிற்கு முதல்வர் நிர்மலா அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் ரமணன், செந்தில்குமார், பிரகாஷ்,
கவிதா பிரியா, சிவக்குமார், கொண்ட ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழு வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பின் இப்போது புதுமையான தோற்றப் பொலிவோடு இந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளார். புதுமையான இந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை முதல்வர் நிர்மலா வெகுவாக பாராட்டினார்.